நேபாளத்தில் ஹோட்டல் செஃப் ஆக மாறிய நடிகர் அஜித்.! தீயாய் பரவும் வீடியோ!!

நேபாளத்தில் ஹோட்டல் செஃப் ஆக மாறிய நடிகர் அஜித்.! தீயாய் பரவும் வீடியோ!!


ajith-became-hotel-chef-video-viral

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி டாப் நடிகராக கொடிகட்டி பறப்பவர் அஜித். அவர் அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதன் அறிவிப்பு அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி வெளியாகும் எனவும் எதிர்பார்க்க படுகிறது.

அஜித் நடிப்பு மட்டுமின்றி பைக் ஓட்டுவதில் தீவிர ஆர்வம் கொண்டவர். அவர் கடந்த சில மாதங்களாக பைக்கில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இடையில் சற்று ஓய்வு எடுத்த அவர் தற்போது மீண்டும் தனது பைக் பயணத்தை  தொடங்கியதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் அஜித் தற்போது நேபாளத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு எடுத்த சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.

மேலும் அங்கு தான் தங்கியிருந்த ஹோட்டலில் நடிகர் அஜித் செஃபாக மாறியுள்ளார். ஏப்ரான், தொப்பி அணிந்து அவர் சமையல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது. மேலும் அங்கு அவருடன் ரசிகர்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.