தல, தளபதி ஒன்றாக சேர்ந்தால் எப்படி இருக்கும் தெரியுமா? வைரலாகும் மாஸ் புகைப்படம்.!

தல, தளபதி ஒன்றாக சேர்ந்தால் எப்படி இருக்கும் தெரியுமா? வைரலாகும் மாஸ் புகைப்படம்.!


ajith-ang-vijay-joining-image-viral

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய்.இவர்கள் இருவருக்கென நாடு முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.
மேலும் இவர்களது படம் வெளியாகும் நாட்களை ரசிகர்கள் திருவிழாவை போல் கொண்டாடி வருகின்றனர்.

விஜய் மற்றும் அஜித் இருவரும் சிறந்த நண்பர்களாக இருந்தாலும், அவர்களது ரசிகர்கள் சிலர் சமூகவலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் தரக்குறைவாக பேசி வருகின்றனர். இதனால் பெரும் சங்கடங்களும் நிகழ்கிறது.

vijay

இந்நிலையில் தற்போது அஜித் தனது 59 வது படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை என பெயரிடப்பட்ட அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வெறும் வரவேற்பை பெற்றது. அதனை போலவே விஜய் 63  படத்தின் படப்பிடிப்பும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர்  விஜய் மற்றும் அஜித்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை ஒன்றாக இணைத்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை ரசிகர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்தது வருகின்றனர்.