எதிர்பார்ப்புகளுக்கிடையே முதன்முறையாக புதிய அவதாரம் எடுக்கும் அஜித்! உற்சாகத்தில் மூழ்கிய ரசிகர்கள்.!

எதிர்பார்ப்புகளுக்கிடையே முதன்முறையாக புதிய அவதாரம் எடுக்கும் அஜித்! உற்சாகத்தில் மூழ்கிய ரசிகர்கள்.!


ajith act in politics movie

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். அவருக்கு உலகமெங்கும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விஸ்வாசம் படம் மாபெரும் வெற்றியை பெற்றது. 

அதனை தொடர்ந்து அவர் தற்போது போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். அதில் அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். மேலும் பாலிவுட் சினிமாவில் மாபெரும் வெற்றியை பெற்ற பிங்க் படத்தின் ரீமேக் படமே நேர்கொண்ட பார்வை ஆகும். இதற்கான படப்பிடிப்புகள் ஓரளவு இறுதிகட்டத்தை நெருங்கிய நிலையில் நடிக்கவுள்ள படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

Ajith

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித், சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார். அதன் பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் வினோத் இயக்க இருக்கும் அதிரடியான அரசியல் திரைப்படத்தில் அஜித் அரசியல்வாதியாக களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

 சமீப காலமாக பல அரசியல் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில்,ரசிகர்களின் எதிர்பார்ப்பின்படி அஜித் முதன்முறையாக அரசியல் படத்தில் நடிக்கவிருப்பதாக வெளிவந்த தகவலால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.