சினிமா

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படத்தால் மிகவும் உற்சாகத்தில் ரசிகர்கள்!

Summary:

Aiswarya rajesh new pic as school ponnu

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் இவர் வல்லவர்.

சமீபத்தில் தமிழில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக தனது திறமையை வெளிப்படுத்தினார். ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து சர்வதேச அரங்கில் கிரிக்கெட் விளையாட்டு வீராங்கனையாக அந்த படத்தில் இவர் சிறப்பாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து இவர் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வெளியாகும் முன்பே மற்றொரு தெலுங்கு படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இந்த படத்தை சதுரங்க வேட்டை 2 படத்தினை இயக்கிய நிர்மல் குமார் இயக்குகிறார். இந்த படத்தில் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்து சர்வதேச அளவில் மல்யுத்த வீராங்கனையாக வளரும் ஒரு கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். கஜினி படத்தில் வில்லனாக நடித்த பிரதீப் ரவாத் ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தையாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், பள்ளி மாணவி போல் உடை அணிந்து பள்ளியறையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றினை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே கனா படத்தில் பள்ளி மாணவியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் அதே போன்ற வேடத்தில் நடிப்பார் போல். இந்த புகைப்படம் எந்த படத்திற்காக எடுத்தது என்று தெரியவில்லை. ஆனால் பள்ளி சீருடையில் மிகவும் அழகாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.


Advertisement