அவருக்குப் பின் அந்த விஷயத்தில் விஜய் தான் கிங்! ட்விட்டரில் ஓப்பனாக வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்

அவருக்குப் பின் அந்த விஷயத்தில் விஜய் தான் கிங்! ட்விட்டரில் ஓப்பனாக வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்


aiswarya-rajesh-about-rajini-vijay-and-sethupathi

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மானாட மயிலாட நடன நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களோடு நடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

2011ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர் காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர். ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை படங்களில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளார். 

aiswarya rajesh

இப்படி படிப்படியாக முன்னேறிய இவர் சமீபத்தில் வெளியாகிய வடசென்னை திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார். அந்த படத்தில் இவருக்கு கொடுக்கப்பட்ட வசனங்களும், முத்த காட்சிகள் ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தை கொடுத்துள்ளது. 

இவர் தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் கனா படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவர் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்திருக்கிறார். இதுதவிர இவர், கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார்.

aiswarya rajesh

பிஸியாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ரசிகர்கள் ட்விட்டரில் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். அதில், உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்வியும் இடம்பெற்றிருந்தது. அதற்கு பதிலளித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், ரஜினிகாந்த், தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி என்று பதிலளித்துள்ளார்.