கடவுளின் குழந்தை அப்பா நீங்க.! உருக்கமாக சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து கூறிய மகள்கள்!!ஏன் தெரியுமா??

கடவுளின் குழந்தை அப்பா நீங்க.! உருக்கமாக சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து கூறிய மகள்கள்!!ஏன் தெரியுமா??


aishwarya-sowndarya-wish-to-rajini

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். பஸ் கண்டக்டராக இருந்த அவர் சினிமா மீது இருந்த ஆர்வத்தால் திரைத்துறையில் களமிறங்கி கடந்த 1975ஆம் ஆண்டு வெளிவந்த அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாதுறையில் அறிமுகமானார்  ஆரம்பத்தில் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்த ரஜினி பின் பைரவி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். 

தொடர்ந்து தனது அசத்தலான, ஸ்டைலான நடிப்பால் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது அவர் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினி சினிமாவில் நுழைந்து தற்போது 47 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

இந்நிலையில் அவரது மகள்கள் ஐஸ்வர்யாவும், செளந்தர்யாவும், தனது தந்தை குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமாக பதிவு வெளியிட்டுள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா வெளியிட்ட பதிவில், 47 ஆண்டுகள் ரஜினியிஸம். கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு! அவருக்கு மகளாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன் என குறிப்பிட்டு ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும் இளைய மகள் சௌந்தர்யா வெளியிட்ட பதிவில், 47 வருடங்கள் என்பது மேஜிக் போல் உள்ளது. நீங்கள் கடவுளின் குழந்தை அப்பா. நீங்கள் ஒரு உணர்வு, அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. லவ் யூ தலைவா என தெரிவித்துள்ளார். அந்தப் பதிவு வைரலாகி வருகிறது.