சினிமா

கால் டாக்ஸி ஓட்டுநராக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. பிறந்தநாள் அன்று வெளியான முக்கிய அறிவிப்பு..

Summary:

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் படத்திற்கு டிரைவர் ஜமுனா என படக்குழு பெயர் வைத்துள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் படத்திற்கு டிரைவர் ஜமுனா என படக்குழு பெயர் வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆட்டம், பாட்டம், கவர்ச்சி இருந்தால்தான் சினிமாவில் நாயகியாக வளரமுடியும் என்பதை தாண்டி, நல்ல கதை உள்ள படங்களை தேர்வு செய்து, தனது சிறப்பான நடிப்பினாலும் வளரமுடியும் என காண்பித்த நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர்.

பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ள இவர் அடுத்ததாக கால் டாக்சி ஓட்டும் பெண்ணாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று தனது 31 வது பிறந்தநாளை கொண்டாடும்நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழு படத்தின் பெயரை அறிவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகிவரும் இந்த படத்திற்கு படக்குழு டிரைவர் ஜமுனா என பெயர் வைத்துள்ளது. கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தை வத்திக்குச்சி படத்தின் இயக்குனர் கின்ஸ்லின் இயக்குகிறார். படத்திற்கு ஜிப்ரான் இசை அமைகின்றார்.


Advertisement