சினிமா

மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தம்! சீரியல் பிரியர்கள் அதிர்ச்சி! மீண்டும் பழைய எபிசோட்கள் தானா?

Summary:

again serial shooting stopped

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் பல கட்டங்களாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக சின்னத்திரை சீரியல்களுக்கான படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்தன. 

ஊரடங்கால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், இதனால் சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்க அரசு அனுமதிக்கவேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர் ஆர்.கே. செல்வமணி முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தினார். இதனையடுத்து நிபந்தனைகளுடன் சீரியல் படப்பிடிப்புகளை தொடங்க முதலமைச்சர் அனுமதியளித்தார். 

ஆனாலும் சென்னையில் நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, வரும் ஜூன் 19-ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார். இந்தநிலையில், இன்னும் ஓரிரு நாளில் புதிய தொலைக்காட்சி தொடர்கள் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அது மேலும் தள்ளிப்போகும் என்று கூறப்படுகிறது.

 இதனால் சீரியல் பிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கொரோனா காரணமா புதிய சீரியல்கள் நிறுத்தப்பட்டு, பழைய எபிசோட்களை ஒளிபரப்பி வந்தனர். மீண்டும் புதிய சீரியல்கள் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், பழைய எபிசோட்களை தான் மீண்டும் ஒளிபரப்ப வேண்டிய சூழிநிலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement