அரசியல் தமிழகம்

ஓட்டு போட வந்த உதயநிதி ஸ்டாலின் சட்டையை பார்த்தீர்களா! தேர்தல் ஆணையத்தில் அதிரடி புகார்!

Summary:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நேற்று எந்தவித பிரச்சினையும் இல்லாமல் விறுவிறுப்பாக நடந்து மு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நேற்று எந்தவித பிரச்சினையும் இல்லாமல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. தமிழகத்தில் மட்டும் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. பொதுமக்கள், அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.

இந்நிலையில் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட்டுள்ளார். அப்பொழுது அவர்
திமுக சின்னம் உதயசூரியன் பொறித்த சட்டையை அணிந்து சென்றுள்ளார்.  சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்ட போதெல்லாம் உதயசூரியன் பொறித்த சட்டையை அணிந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்றும் வாக்களிக்க சென்ற போது உதயசூரியன் சின்னம் பொறித்த சட்டையை அணிந்து சென்றுள்ளார். இது தேர்தல் விதிமுறை மீறல். வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தொலைவில்தான் இந்த சின்னத்தை பயன்படுத்த வேண்டும். 

 இந்நிலையில் அதிமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அறிக்கை கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரி  தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Advertisement