சண்டகோழி 2-ல் நடிகை வரலட்சுமியின் பெயர் என்ன தெரியுமா?

சண்டகோழி 2-ல் நடிகை வரலட்சுமியின் பெயர் என்ன தெரியுமா?


actress-varalakshmi-new-name

சண்டகோழி 2-ல் நடிகை வரலட்சுமியின் பெயர் என்ன தெரியுமா? 

விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரைப்படம் "சண்டக்கோழி-2". இப்படத்தை லிங்குசாமி இயக்கி வருகிறது. விஷாலுக்கு வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. 

சண்டக்கோழி-2 விஷாலின் 25-வது படம். இந்த படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரித்துள்ளார். மேலும், யுவன் ஷங்கர் ராஜா இசையில் சமீபத்தில் வெளியாகிய "செங்கரட்டான் பாறையில" என்ற பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படம் வரும் 18ம்தேதி வெளியாவதை ஒட்டி இந்த படத்தின் புரோமஷனுக்காக அதிக அளவு விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. படத்தை பற்றிய முக்கிய தகவல்களும் பகிரப்பட்டு வருகிறது. 

அண்மையில் வரலட்சுமியின் டெரர் லுக் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. இந்த புகைப்படங்களில் நடிகை வரலட்சுமி, அதிரடியாக காட்சியளித்தார். படத்தில் இவர் வில்லியாக நடிக்கிறார். அந்த கேரக்டரில் பெயர் என்ன என இன்று வெளியிட்டுள்ளனர். படத்தில் வரலட்சுமி கதாபாத்திரத்தின் பெயர் பேச்சி என்பதாகும். பேச்சி கதாபாத்திரத்தில் வரலட்சுமி கலக்கி எடுத்திருப்பார் என அவரின் புகைப்படங்களை பார்த்தாலே புரிந்து கொள்ள முடிகிறது.