சினிமா

முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா முதல் படத்தில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Summary:

Actress thrisha first salary

தமிழ் சினிமவின் புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை த்ரிஷா. 1999 ஆம் ஆண்டு மிஸ். மெட்ராஸ் பட்டம் பெற்ற நடிகை த்ரிஷா மாடலின் துறையில் அறிமுகமாகி அதன்பின்னர் சினிமாவில் காலடி வைத்தார். தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இன்றுவரை வளம் வருகிறார் நடிகை த்ரிஷா.

விஜய், அஜித், ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை த்ரிஷா. ஆடல், பாடல், கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தவிர்த்து தற்போது நல்ல கதை அம்சம் உள்ள படங்களை மட்மே தேர்வு செய்து நடித்துவருகிறார் த்ரிஷா.

பிரசாந்த், சிம்ரன் நடித்த ஜோடி என்ற படத்தில் நடிகை சிம்ரனுக்கு தோழியாக முதல் முதலில் சினிமாவில் அறிமுகமான நடிகை த்ரிஷா அந்த படத்திற்காக வாங்கிய சம்பளம் 1000 ரூபாய் மட்டும்தானாம். அதன்பின்னர் மாதவன், ஷாம் நடித்த லேசா லேசா படத்தில் நாயகியாக அறிமுகமானார் நடிகை த்ரிஷா.


Advertisement