சினிமா

ஆள் அடையாளம் தெறியாமல் மாறிய நடிகை டாப்ஸி! புகைப்படம் பாருங்கள் தெரியும்!

Summary:

Actress tapsee pannu 60 years old look photo goes viral

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் என்ற படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை டாப்ஸி. ஆடுகளம் படம் தமிழ் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய இடத்தை பெற்று தந்தது. ஆடுகளம் படத்தை அடுத்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா போன்ற படங்களில் நடித்தார் டாப்ஸி.

காஞ்சனா படமும் இவரது சினிமா பயணத்தில் வெற்றிப்படமாக அமைந்தது. தமிழ் மட்டும் உள்ளது தெலுங்கு, ஹிந்தி சினிமாவிலும் நடித்து அங்கும் பிரபலமானார் நடிகை டாப்ஸி. அஜித் நடிப்பில் உருவாகிவரும் வேர்கொண்ட பார்வை படத்தின் ஹிந்தி வெர்சனான பிங்க் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

வெறும் ஆடல், பாடல், கவர்ச்சி என்று இருந்த டாப்ஸி தற்போது நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வே செய்து நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் பாலிவுட் படத்தில் 60 வயது முதியவராக நடிக்கிறாராம் டாப்ஸி.

அந்த படத்தின் ஃபஸ்ட் லுக் இன்று வெளியாக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. அந்த புகைப்படத்தில் இருந்த டாப்ஸியை பார்த்து இது டாப்ஸியா என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள் ரசிகர்கள். 


Advertisement