"வீட்டுக்கு வாடகை கட்டக் கூட வழியில்லை" வடிவேலு பட நடிகை கண்ணீர் பேட்டி.!

"வீட்டுக்கு வாடகை கட்டக் கூட வழியில்லை" வடிவேலு பட நடிகை கண்ணீர் பேட்டி.!


Actress sumathi viral interview

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து பலராலும் அறியப்பட்டவர் தான் நடிகை சுமதி. 50க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள இவர், வடிவேலுவுடன் 20 படங்கள் வரை நடித்திருக்கிறார்.

Vadivel

இவர் சேலம் மாவட்டம் இரும்பாலை பகுதியில் உள்ள அரியாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர். சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலுக்கு சுமதி பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, " என்னுடைய 16 வயதில் என் சொந்த மாமாவை திருமணம் செய்து வைத்தார்கள்.

ஆனால் அவரால் நிறைய கொடுமைகளை அனுபவித்தேன். ஒருகட்டத்தில் கொடுமை தாங்காமல் சென்னை வந்துவிட்டேன். இங்கு வந்து இன்னொரு திருமணம் செய்துகொண்டேன். இங்கு என் கணவரின் ஒத்துழைப்புடன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன்.

Vadivel

வடிவேலு சாருடன் மட்டும் 20 படங்கள் நடித்துள்ளேன். ஆனால் தற்போது வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன். நடிகைகள் என்றாலே லட்சங்களில் சம்பாதிப்பார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படி எல்லாம் எதுவும் இல்லை" என்று சுமதி கண்ணீருடன் கூறியுள்ளார்.