சிரிப்பழகி சினேகாவையே இப்படி அழ வச்சுட்டீன்களேபா....! ஷாக்கிங் வீடியோ இதோ....actress-snega-crying-in-zee-tamil-junior-ss-show

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல், சூர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சினேகா. சிரிப்பழகி என அனைவராலும் அழைக்கப்பட்ட சினேகாவிற்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.

இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர். சிறிது காலம் சினிமாவிற்கு இடைவெளிவிட்டிருந்த சினேகா தற்போது மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து வெங்கட் பிரபுவுடன் இணைந்து புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் நடிகை சினேகா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று ஒளிபரப்பாகவுள்ள ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியின் ப்ரோமோ வீடியோ  ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நடிகை சினேகா தீடீரென யாரோ ஒருவரை பார்த்து கதறி அழுகிற வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ காட்சி...