சினிமா

நடிகை சிம்ரனின் மகனா இது? அவருக்கு இவ்வளவு பெரிய மகனா? எப்படி இருக்கார் பாருங்க..! வைரலாகும் புகைப்படம்.

Summary:

நடிகை சிம்ரனின் மகன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

நடிகை சிம்ரனின் மகன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகைகளில் ஒருவர் சிம்ரன். நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதன்பின் ஏகப்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது என்றும் கூறலாம்.

இப்படி சினிமாவில் பிசியாக இருந்த இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார். தற்போது இவர்களுக்கு அதீப் மற்றும் ஆதித் என இரண்டு மகன்கள் உள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் சிம்ரன்.

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் ரீஎன்ட்ரி கொடுத்த இவர் சீமராஜா படத்தில் மிரட்டும் வில்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது 44 வயதாகும் நடிகை சிம்ரன் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சிம்ரன் தன் மூத்தமகனோடு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகனா? என ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்துவருகின்றனர்.


Advertisement