சினிமா

பிறந்தநாள் பார்ட்டியில் காதலருக்கு லிப்லாக் கொடுத்த ஸ்ருதி ஹாசன்...! இணையத்தில் கசிந்த வீடியோ இதோ...

Summary:

பிறந்தநாள் பார்ட்டியில் காதலருக்கு லிப்லாக் கொடுத்த ஸ்ருதி ஹாசன்...! இணையத்தில் கசிந்த வீடியோ இதோ...

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழி படங்களிலும் முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.  

இதையடுத்து  ஸ்ருதி ஹாசன் கடைசியாக தமிழில் லாபம் படத்தில் நடித்துள்ளார். அதன்பின்னர் வெப் தொடர் என பிஸியா இருந்த இவர் தற்போது தந்தை வயது நடிகரான சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் ஸ்ருதி அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது காதலருடன் நெருங்கி இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார். சமீபத்தில் காதலர் சாந்தனுவின் பிறந்த நாள் பார்ட்டி கோலகளாமாக நடைபெற்றது. அப்போது காதலர் சாந்தனு கேக் வெட்டி ஊட்டி ஸ்ருதி ஹாசனுக்கு லிப்லாக் முத்தம் கொடுத்த வீடியோ தற்போது இணையத்தில் கசிந்து பெருமளவில்  வைரலாகி  வருகிறது. இதோ  அந்த வீடியோ...

 


Advertisement