சினிமா

விஜய்யின் புலியும் இல்லை, அஜித்தின் வேதாளமும் இல்லை. ஸ்ருதிகாசனுக்கு பிடித்தது இந்த படம்தானாம்!

Summary:

Actress shruthi hasan favorite movie name

பிரபல நடிகரான உலகநாயகன் கமலஹாசனின் மகள் சுருதிஹாசன். இவர் தமிழ்,தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் நடித்துள்ளார் . மேலும் தமிழ் திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுடன் 7 ஆம் அறிவு, வேதாளம், புலி, 3, பூஜை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 

மேலும் இவர் சிறு வயது முதலே பல வெற்றி படங்களின் பாடல்களை பாடியுள்ளார். நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு தமிழில் தற்போது கைவசம் எந்த படமும் இல்லை. கடைசியாக அவர் சிங்கம் 3 படத்தில் தான் நடித்திருந்தார். அவர் தற்போது சன் டிவியில் ஹலோ சகோ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில் கடந்தவாரம் அக்ஷரா ஹாசன் மற்றும் ஆர்ஜே பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது நடிகை ஸ்ருதிகாசனிடம் நீங்கள் நடித்த படத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்தபடம் எது என கேள்விகேட்டனர். அதற்கு அவர் மகேஷ் பாபு உடன் நடித்த ஸ்ரீமந்துடு என கூறியுள்ளார். புலி, வேதாளம் என தமிழிலில் பெரிய நடிகர்களின் படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு பிடித்தது என்னவோ  ஸ்ரீமந்துடு படம்தானாம்.


Advertisement