என்னது.. நடிகை ஷெரின் கல்யாணம் பண்ணிட்டாரா! அதுவும் யாரை தெரியுமா? அவரே கூறிய பதில்!!

நடிகை ஷெரின் கல்யாணம் பண்ணிட்டாரா! யாரை தெரியுமா? அவரே கூறிய பதில்!!


actress-sherin-talk-about-marriage

தமிழில் துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷெரின். இந்த படத்தின் மூலம் அவர் இளசுகளின் மனதை பெருமளவில் கவர்ந்தார். 16 வயதில் மாடலான  ஷெரின் துருவா என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்த அவர் பின்னர் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், அவர் படங்களில் ஒற்றைப் பாடலுக்கு மட்டும் நடனமாடினார். பின்னர் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் போது மிகவும் குண்டாக இருந்த அவர் பின்னர் எடை குறைந்து செம ஸ்லிம்மானார்.

Sherin

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அண்மையில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர், எப்போ கல்யாணம்? என கேட்டுள்ளார். அதற்கு ஷெரின், இப்போதைக்கு உணவை திருமணம் செய்து கொண்டுள்ளேன் என ஜாலியாக பதிலளித்துள்ளார்.