இந்தியா சினிமா

4 கோடிக்கு கார் ஆனா வெள்ள நிவாரணநிதி மட்டும் இவ்வளவுதான், நன்றி கெட்டவங்களே..கேரள நடிகர்களை தெறிக்கவிடும் பிரபல நடிகை .!

Summary:

4 கோடிக்கு கார் ஆனா வெள்ள நிவாரணநிதி மட்டும் இவ்வளவுதான், கேரள நடிகர்களை தெறிக்கவிடும் பிரபல நடிகை .!

4  கோடி ரூபாய்க்கு கார் வைத்திருக்கும் நடிகர்கள் ,கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு சில லட்சங்களை மட்டும் நிவாரண நிதியாக கொடுப்பது நன்றியை மறந்த செயல் என கேரளா நடிகர்களை முன்னாள் நடிகை ஷீலா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

 கேரள மாநிலத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெருமழை பெய்தது.இதனால் கடும் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.மேலும் மழைவெள்ளத்தாலும் ,நிலச்சரிவிலும் பாதிக்கப்பட்டு 400க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானது.

kerala flood க்கான பட முடிவு

மேலும் பொதுமக்கள் பலரும் தங்கள் வீடுகளை இழந்தும் உடைமைகளை இழந்தும் தவித்தனர்.மேலும் லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கேரள மக்களுக்கு உதவி செய்யும் வகையில் பல அரசியல் தலைவர்களும்,திரை பிரபலங்களும் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்களும் தாமே முன்வந்து நிவாரண நிதியை கொடுத்து உதவி செய்தனர்.

ஆனால் கேரள மக்களால் உயர்ந்து பணம் சம்பாதித்த கேரள நடிகர்கள் பலரும் சில லட்சங்களை மட்டுமே நிவாரண நிதியாக அளித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 இந்நிலையில் இதனால் கடும் ஆத்திரமடைந்த முன்னாள் நடிகை ஷீலா, பல முன்னணி மலையாள நடிகர்கள் 4 கோடி ரூபாய்க்கு காரே வைத்துள்ளனர்.ஆனால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்களது வீடுகளையும்,உடமைகளையும் இழந்து அவதிப்பட்டு வரும் கேரள மக்களுக்கு உதவ ஒரு சில லட்சங்கள் மட்டுமே நிவாரண நிதியாக கொடுத்துள்ளனர்.

மேலும் கொடிக்கட்டி பறக்கும் இந்த நடிகர்,நடிகைகளின் உயர்ந்த நிலைக்கு காரணம் கேரளாவில் வாழும் ரசிகர்களே, ஆனால் நன்றி உணர்வு என்பது சிறிதும் பல நடிகர்களுக்கு இல்லை,நன்றி கெட்ட தனமாக நடந்து கொள்கின்றனர் என ஆவேசமாக கூறியுள்ளார்.


 


Advertisement