புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
பிரபல நடிகர் கொடுத்த தொல்லை.? சினிமாவில் இருந்து விலகியதற்கான காரணம்.! மனம் திறந்த சரண்யா மோகன்..
தமிழ் திரை துறையில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் கனவு கனவாக வலம் வந்தவர் சரண்யா மோகன். தனது நடிப்பு தன்மையின் மூலம் ரசிகர்களின் மனதில் கவர்ந்து நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.
தமிழில் யாரடி நீ மோகினி, வெண்ணிலா கபடி குழு, வேலாயுதம், ஈரம் போன்ற ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். மேலும் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார் சரண்யா மோகன்.
இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு சினிமா துறையை விட்டு விலகி விட்டார். சமீபத்தில் இவர் கலந்து கொண்ட பேட்டியில் இதற்கான காரணத்தை கூறியிருக்கிறார். அவர், "எனக்கு சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற ஆசை இல்லை. திடீரென்று சினிமாவிற்குள் வந்தேன். பின்பு திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகி விட்டேன்" என்று கூறியிருக்கிறார்.
மேலும் இன்று வரை பல ரசிகர்கள் உங்கள் போட்டோவை மொபைலில் வைத்துள்ளனர். யாராவது ப்ரொபோஸ் செய்து இருக்கிறார்களா என்ற தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு "நிறைய பேர் செய்திருக்கிறார்கள். என் அப்பாவிடம் சினிமா துறையில் இருந்தவர்களும் பொண்ணு கேட்டும் வந்திருக்கிறார்கள். ஒரு பிரபல நடிகர் கூட என்னிடம் நேரடியாகக் கேட்டார் ஆனால் அவர் பெயரைக் கூற முடியாது" என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.