பாண்டியன் ஸ்டோர் நடிகை வீட்டில் நேர்ந்த திடீர் மரணம்! கதறும் குடும்பத்தார்கள்! வெளியான ஷாக் தகவல்!

பாண்டியன் ஸ்டோர் நடிகை வீட்டில் நேர்ந்த திடீர் மரணம்! கதறும் குடும்பத்தார்கள்! வெளியான ஷாக் தகவல்!


Actress santhi villiams son dead

தமிழ் சினிமாவில் வியட்நாம் வீடு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி அதனைத் தொடர்ந்து பல படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சாந்தி வில்லியம்ஸ். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

மேலும் சாந்தி வில்லியம்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் குறிப்பாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் தொடரில்  முல்லையின் அம்மாவாக  நடித்து வருகிறார்.

Santhosh

சாந்தி வில்லியம்ஸ் அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் தற்போது  34 வயது நிறைந்த அவரது மகன் சந்தோஷ் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் தனது அறைக்கு தூங்கச் சென்ற சந்தோஷ் மறுநாள் மதியம் வரை எழுந்திருக்கவே இல்லை. இந்நிலையில் அவரது தாய் சாந்தி அவரை எழுப்ப முயன்றுள்ளார். ஆனால் அப்பொழுதும் அவர் எழுந்திருக்கவில்லை என கூறப்படுகிறது.

அவரைத் தொடர்ந்து சாந்தி அவரை  அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு தூக்கி சென்றபோது அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சந்தோஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.