
கண்டேன் பட நடிகை ராஷ்மி கவுதமுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கோர தாண்டவமாடியது. மேலும் இத்தகைய கொடிய வைரஸ் தொற்றால் சாமானியர்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போதும் கொரோனா குறைந்தபாடில்லை.
இந்த நிலையில் பிரபல நடிகை ராஷ்மி கவுதமுக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழில், சாந்தனு, சந்தானம் நடிப்பில் வெளிவந்த கண்டேன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ராஷ்மி கவுதம். மேலும் இவர் தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை ராஷ்மி தற்போது தெலுங்கில் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் அவர் ஜபர்தஷ் என்ற காமெடி நிகழ்ச்சிக்கான ஷூட்டிங்கில் பங்கேற்றபோது, அதே படப்பிடிப்பில் கலந்துகொண்ட சுதீர் என்பவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ராஷ்மி கவுதமுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது மேலும் நடிகை ராஷ்மி கவுதம் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Advertisement
Advertisement