
நடிகை நிக்கி கல்ராணிக்கு பிரபல தமிழ் நடிகருடன் விரைவில் திருமணமா...? கசிந்த தகவல்..!
தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த டார்லிங் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் நடித்த முதல் படம் மூலமே தமிழ் சினிமாவில் பிரபலமாகிவிட்டார். அதனை தொடர்ந்து அவர் யாகாவாராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்டசிவா கெட்டசிவா மற்றும் ராஜவம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து நிக்கி கல்ராணி சமீபத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருந்தார். மேலும் படம் வெற்றிபெறாவிட்டாலும் அந்த படத்தில் வந்த சின்ன மச்சான் பாடல் மாபெரும் வெற்றிபெற்றது. தற்போது மிர்ச்சி சிவா உடன் நிக்கி கல்ராணி நடித்து இருக்கும் இடியட் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் மரகத நாணயம், யாகாவாராயினும் நாகாக்க ஆகிய படங்களில் நடித்த ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் காதலித்து வருவதாக நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆதி வீட்டில் நடந்த விழாவில் நிக்கி கல்ராணி கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் தற்போது மீண்டும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது நிக்கி கல்ராணி மற்றும் ஆதிக்கு வீட்டில் திருமண ஏற்பாடு நடப்பதாக தகவல் கசிந்து வருகிறது. ஆனால் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவருமே தற்போது வரை இதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
Advertisement
Advertisement