சினிமா

வெற்றிவேல் பட நடிகை வீட்டில் நேர்ந்த திடீர் துயரம்! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தார்கள்! ஆறுதல் கூறும் திரையுலகினர்!

Summary:

நடிகை நிகிலா விமலின் தந்தை பவித்ரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், திடீரென நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த வெற்றிவேல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிகிலா விமல். அதனைத் தொடர்ந்து அவர் கிடாரி மற்றும் கார்த்திக்கிற்கு ஜோடியாக தம்பி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இளம் நாயகியாக பெருமளவில் பிரபலமானார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை நிகிலா விமலின் தந்தை பவித்ரன். இவர் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்ட நிலையில் கண்ணூரில் உள்ள  பரியரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திடீரென அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

Actor Nikhila Vimal's father passes away | Kerala News | Onmanorama

நிகிலா விமலின் தந்தை பவித்ரன் அவர்கள் சிபிஐ கட்சியின் தேசியத் துணைச் செயலாளராகவும் மாவட்ட செயலாளராகவும் இருந்தவர். இவரது மரணச் செய்தி கேட்டு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement