என்னது.. நயன்தாராவுக்கு இந்த சாப்பாடு தான் ரொம்ப பிடிக்குமா?.. இத கூடவா சாப்பிடுவாங்க..! actress-nayanthara-favourite-food

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் நயன்தாரா. இவரது நடிப்பில் அடுத்ததாக நயன்தாரா 75, காட்பாதர், ஜவான் மற்றும் ஏகே 62 ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதனை தொடர்ந்து சமீபத்தில்தான் நயன்தாராவிற்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடைபெற்று முடிந்தது.

actress nayanthara

இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் ஒரு பிரமாண்ட ஹோட்டல் நடைபெற்றது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. பின் இருவரும் ஹனிமூன் சென்றிருந்த நிலையில், விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அங்கு எடுக்கும் புகைப்படத்தை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

actress nayanthara

இந்த நிலையில் நடிகை நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் சாப்பாடு ஊட்டிவிடுவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனைகண்ட  ரசிகர்கள் அப்போ நயன்தாராவிற்கு மிகவும் பிடித்து சாப்பாடு ஹைதராபாத் பிரியாணி தான் என்று கூறி வருகின்றனர். அது மட்டுமின்றி சீன உணவுகளை கூட நயன்தாரா விரும்பி உண்பாராம்.