சினிமா

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை நதியா சீரியலில் களமிறங்கியதன் காரணம் என்ன தெரியுமா??

Summary:

actress nathiya in serial


தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமானது சன் தொலைக்காட்சி. தமிழ்நாடு மட்டும் இல்லது இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது சன் தொலைக்காட்சி.  சன் தொலைக்காட்சியின் இந்த பெரும் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது அதில் ஒளிபரப்பாகும் சீரியல் தொடர்கள் தான்.

இல்லத்தரசிகள் மட்டுமே சீரியல் பார்த்துவந்த காலம் மாறி தற்போது இளைஞர்கள், இளம்பெண்கள் என பலரும் சீரியல் பார்க்க தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக அணைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் நாளுக்கு நாள் புது புது விதத்தில் மக்களை கவர்ந்துவருகிறது.

அந்த வகையில் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ரோஜா என்ற சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் அந்த நிகழ்ச்சியை ப்ரைம் டைமான இரவு 9 மணிக்கு மாற்றியுள்ளது சன் டிவி. 

மேலும் வரும் மார்ச் 18 முதல் ரோஜா தொடர் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்தநிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த நடிகை நதியா இந்த தொடரில் புதிதாக சேர்ந்துள்ளார். 

தற்போது வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடர் தான் TRP ல் முதல் இடத்தில் இருந்துவந்தது. இதனை முந்தும் விதமாக பிரமாண்டமாக உருவெடுத்துள்ளது சன் டிவியின் ரோஜா தொடர். இதன் காரணமாகவே நடிகை நதியா இந்த தொடரில் களமிறங்கியுள்ளார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
 


Advertisement