பிரபல தமிழ் நடிகையின் அழகி பட்டம் பறிப்பு; அழகிப் போட்டி நடத்த இருந்தவருக்கு நேர்ந்த கொடுமை.!

பிரபல தமிழ் நடிகையின் அழகி பட்டம் பறிப்பு; அழகிப் போட்டி நடத்த இருந்தவருக்கு நேர்ந்த கொடுமை.!


actress-meera-mithun---miss-south-india---cannot-title

பெங்களூருவை சேர்ந்தவர் நடிகை மீரா மிதுன். இவரது உண்மையான பெயர் தமிழ்ச்செல்வி. சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்த இவர், மிஸ் குயின் ஆஃப் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு அழகிப்பட்டம் வென்றுள்ளார்.

தமிழ் சினிமாவில், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீரா மிதுன். இந்நிலையில் தமிழ் பெண்களுக்கு அழகிப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு அதிக வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்து தமிழ் பெண்களுக்காக அழகிப் போட்டிகளை ஜூன் 3 அன்று நடத்த திட்டமிட்டார்.

Meera mithun

இந்நிலையில், அழகிப் போட்டியை நடத்தக் கூடாது என்று சிலர், தன்னை மிரட்டுவதாகவும் தன் சமூக வலைத்தள பகத்தை முடக்கி தவறாக பதிவிடுவதாகவும் காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இதனிடையே அழகி போட்டி நடத்த மீரா மிதுன் அனுமதி பெறவில்லை என்றும், அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதன் காரணமாக 2016ல் அவருக்கு வழங்கப்பட்ட மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை திரும்பப் பெறுவதாக மிஸ் சவுத் இந்தியா அமைப்பு பகிரங்கமாக அறிவித்துள்ளது. இனி மேல் அந்த பட்டத்தை எங்கும் அவர் பயன்படுத்த அனுமதியில்லை என எச்சரித்துள்ளது.