எல்லோருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது! தயவு செய்து இதை செய்யுங்கள்..! நடிகை மீனா.
எல்லோருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது! தயவு செய்து இதை செய்யுங்கள்..! நடிகை மீனா.

இந்தியாவில் கொரோன வைரஸ் அதிக அளவில் பரவி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், விழிப்புணர்வையும் மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் தனி தனியாக ரசிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நடிகை மீனா கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு நாடு முழுவதும் ஊரடங்கை பிறப்பித்துள்ள நிலையில் அதனை மதிக்காமல் மக்கள் வெளியே சுற்றி திரிவதை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது.
இதே போல் அரசு சொல்வதை மக்கள் கேட்காததால் தான் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் பல ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். அந்த நிலைமை இந்தியாவுக்கு வராமல் இருக்க எல்லாரும் தங்களது வீடுகளிலேயே இருந்து தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழியுங்கள். மேலும் வீட்டுக்குள்ளேயே இருந்து உலகத்தை காப்பாற்றும் ஒரு அற்புதமான வாய்ப்பு எல்லோருக்கும் அடிக்கடி கிடைக்காது.
எனவே அனைவரும் ஜாக்கிரதையாக பாதுகாப்புடன் இருந்தால் தான் உங்களது குடும்பம் பாதுகாப்பாக இருக்க முடியும். தயவு செய்து பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள் என நடிகை மீனா கேட்டு கொண்டுள்ளார்.