நடிகை மீனா கணவர் உயிரிழப்பு! புறாவின் எச்சம்தான் காரணமா?? வெளிவந்த பகீர் தகவல்!!

நடிகை மீனா கணவர் உயிரிழப்பு! புறாவின் எச்சம்தான் காரணமா?? வெளிவந்த பகீர் தகவல்!!


Actress meena husband dead for lungs problem

தமிழ் சினிமாவில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து 90'ஸ் காலகட்டங்களில் டாப் நடிகையாக வலம் வந்தவர் மீனா. இவருக்கு பெங்களூரைச் சேர்ந்த  வித்யாசாகர் என்பவருடன் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். அவர் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமாகியுள்ளார்.

இந்த நிலையில் நுரையீரல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அதாவது பெங்களூருவில் வித்யாசாகர் வீட்டின் அருகே  அதிகளவில் புறாக்கள் வளர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நுரையீரல் பாதிப்பால் சிரமப்பட்டு வந்த வித்யாசாகருக்கு புறாக்களின் எச்சம் பட்ட காற்றை சுவாசிப்பதால் நுரையீரலில் அலர்ஜியும் ஏற்பட்டுள்ளது.

meena

இந்த நேரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவரது நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. மேலும் இரு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் நுரையீரல் தானம் கிடைக்க தாமதமானதால் அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த மருத்துவர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திரையிலகினர் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் வித்யாசாகரின் இறுதிச்சடங்கு கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று நடைபெறும் என கூறப்படுகிறது.