சினிமா

உதவியென்றால் முதலில் வருவார்.. தளபதியை புகழ்ந்து தள்ளிய மாஸ்டர் பட நடிகை! அவர் கூறியதை பார்த்தீர்களா!!

Summary:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டான படம் மாஸ்டர். இந்தப் படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். இவர் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 

அதனைத் தொடர்ந்து அவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். மாஸ்டர் படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் விஜய்யின் நண்பராக மாறிய அவர் விஜய்யின் நட்பு குறித்து மிகவும் புகழ்ந்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, விஜய் அவர்கள் நண்பர்களுக்காக எப்போதும் இருப்பவர். எப்பொழுது வேண்டுமானாலும் அவருக்கு போன் செய்து பேசலாம். அவர் போனை எடுப்பார். மேலும் என்ன உதவி வேண்டுமானாலும் உடனே செய்வார். அவர் எல்லா நண்பர்களிடமும் அவ்வாறுதான் நடந்து கொள்வார்.

விஜய் வாயிலிருந்து தவறாக, எதிர்மறையாக ஒரு வார்த்தை கூட வந்து நான் கேட்டதில்லை. எப்போதுமே உற்சாகமாக பாசிட்டிவான சிந்தனையுடன் இருப்பார். மிகவும் இனிமையானவர். எதையும் மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடியவர் என புகழ்ந்து கூறியுள்ளார்.


Advertisement