சினிமா

41 வயதிலும் இப்படியா! குட்டையான உடையில் குறையாத கிளாமரில் நடிகை மாளவிகாவை பார்த்தீர்களா!

Summary:

நடிகை மாளவிகா குட்டையான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நியூ இயர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த  1999 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் இணைந்து உன்னை கொடு என்னை தருவேன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா. அதனை தொடர்ந்து அவர் ஆனந்த பூங்காற்றே, ரோஜா வனம், வெற்றிக்கொடிகட்டு,  பேரழகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், சந்திரமுகி, நான் அவன் இல்லை, திருட்டுப்பயலே என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் நாளடைவில் அவருக்கு படவாய்ப்புகள் குறைந்த நிலையில் அவர் துணை நடிகையாகவும், ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடுவது என இருந்தார். பின்னர் 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். அதனை தொடர்ந்தும் சில படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டிவரும் மாளவிகா அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் தனது கிளாமர் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் மாளவிகா நேற்று மிகவும் குட்டையான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நியூ இயர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் இதனை கண்ட ரசிகர்கள் 41 வயதிலும் கிளாமர் குறையவே இல்லையே என கமெண்டு செய்து வருகின்றனர்.


Advertisement