சினிமா

முதல் முறையாக வெளியான நடிகை மாளவிகாவின் குழந்தைகள் புகைப்படம்! புகைப்படம் உள்ளே!

Summary:

Actress malavika family photo

சித்திரம் பேசுதடி படத்தில் வரும் வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் இன்றுவரை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த பாடலில் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்திருப்பார் நடிகை மாளவிகா. உன்னை தேடி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என முன்னணி நடிகையாக இருந்தார்.

வெற்றிகொடிக்கட்டு, சந்திரமுகி போன்ற படங்களில் துணை நடிகையாகவும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மாளவிகா. கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர் அதன்பின்னர் கடந்த 10 வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கியே உள்ளார்.

சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை மாளவிகாவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இதுவரை பெரிதாக வெளிவராத இவர்களது புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.


Advertisement