அரசியல் சினிமா

அதிமுகவில் விரைவில் பதவி! அதிரடி அரசியல் ! பிரபல நடிகையின் திடீர் முடிவு!

Summary:

Actress latha interested to join with admk party

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நடித்த ''உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கால் பதித்தவர் நடிகை லதா, அதன் பின்னர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் சுமார் 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார் லதா.

இந்நிலையில், பழம்பெரும் நடிகையான லதா, அதிமுகவில் பதவி வழங்கினால் அரசியலில் தீவிரமாக களமிறங்கி பணியாற்ற தயார் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டீவியில் ஒளிபரப்பாகும் வள்ளி என்ற தொடரிலும் இவர் நடித்து வருகிறார். மேலும் தன்னை அதிமுக கட்சியுடன் இணைத்து செயல்பட்டு வருகிறார்.  அதிமுகவில் தனக்கு பதவி வழங்கினால் தீவிர அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் பதவி வழங்குவதாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்கள் சந்தியில் பேசிய நடிகை லதா, ''அதிமுக தொடங்கிய காலத்தில், தனது பங்களிப்பும் உள்ளது என்றும் தான் அதற்காக பெருமை படுவதாகவும் தெரிவித்தார். கமல், ரஜினி இருவரும் அரசியலுக்கு வந்திருப்பதை வரவேற்கிறேன். ஆனால் அவர்களுடைய செயல்பாட்டை பொறுத்துதான் மக்கள் ஆதரவு அவர்களுக்கு கிடைப்பது குறித்து கூறமுடியும்.'' என்று நடிகை லதா தெரிவித்துள்ளார்.


Advertisement