சினிமா

இப்புடி தூக்கி காமிச்சா பாவம் ரசிகர்கள் என்ன பண்ணுவாங்க! வைரலாகும் லட்சுமி மேனனின் கலக்கல் புகைப்படம்.

Summary:

Actress Lakshmi Menon latest dance photos goes viral

சேலைகட்டி பரதநாட்டியம் ஆடியாவாறு நடிகை லட்சுமி மேனன் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை லட்சுமி மேனன். சுந்தரபாண்டியன் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் கும்கி திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவு கண்ணியகாவே மாறிவிட்டார். கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஒப்பந்தமானார் லட்சுமி மேனன்.

ஒருபுறம் இவரது வெற்றி பயணம் அதிகரித்துக்கொண்டே போனாலும், ஒருபுறம் இவரது உடல் எடையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. இதனால் போதிய பட வாய்ப்புகள் இல்லாமல், மீண்டும் தனது சொந்த ஊரான கேரளாவுக்கே சென்றுவிட்டார் அம்மணி.

தற்போது தீவிர உடற்பயிற்சிக்கு பிறகு இது நம்ம லட்சுமி மேனனா என கேட்கும் அளவிற்கு படு ஸ்லிம்மாக மாறிவிட்டார் லட்சுமி மேனன். இருந்தாலும் இவரது பொல்லாத நேரம் கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா வேலைகள் அனைத்தும் முடங்கியுள்ளதால் இவருக்கு தற்போதும் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

சினிமாவில் இருந்து சென்றாலும், அவ்வப்போது தனது புகைப்படம், வீடியோக்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காடவைத்து வருகிறார் லட்சுமி மேனன். அந்த வகையில் தற்போதும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.


Advertisement