மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
முகமெல்லாம் ஒல்லியாக மாறி, ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை குஷ்பு!! வைரல் புகைப்படம் இதோ..

உடல் எடையை குறைத்து அடையாளமே தெரியாமல் மாறிப்போன நடிகை குஷ்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் குஷ்பு. சினிமா, சீரியல், தயாரிப்பு நிறுவனம், அரசியல் என பலதுறைகளில் கலக்கிவருகிறார் குஷ்பு. ஒருகாலத்தில் இளைஞர்களின் கனவு நாயகியாக இருந்த இவருக்கு, அவரது ரசிகர்கள் கோவில் கட்டி வழிபட்டனர்.
தோற்றத்தில் சற்று குண்டாக இருந்ததால், குஷ்பு இட்லி என அழைக்கப்படும் அளவிற்கு இவரது புகழ் தமிழகமெங்கும் பரவியது. அதேநேரம் ஒருகட்டத்தில் உடல் எடை பயங்கரமாக கூடி ஆளே அடையாமல் தெரியாமல் மாறிப்போனார் நடிகை குஷ்பு.
சமீப காலமாக தனது உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்திவரும் குஷ்பு, அந்த முயற்சியில் பெரிய வெற்றியும் பெற்றுள்ளார். தனது உடல் எடை குறைந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு லைக்ஸ் பெற்றுவரும் குஷ்பு, தற்போது தனது உடல் எடையை மேலும் குறைத்து, முகம்செல்லும் ஒல்லியாக மாறிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.