
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகவும், இளைஞர்களின் கனவு கன்னியாகவும் திகழ்பவர் நடிகை கீர்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகவும், இளைஞர்களின் கனவு கன்னியாகவும் திகழ்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையான நடிகையர் திலகம் படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு பிறந்த நாள் கொண்டாடிய அனிருத்துக்கு கீர்த்தி சுரேஷ் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்ததுடன் அவருடன் நெருக்கமாக இருக்கும் 2 புகைப்படங்களையும் பகிர்ந்தார்.
தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவதுடன் இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. ஆனால் இதனை கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை.
Advertisement
Advertisement