சினிமா

ஊரடங்கு..! படப்பிடிப்புகள் இல்லாததால் வயலில் இறங்கி நாற்றுநடும் பிரபல நடிகை..! வைரல் வீடியோ.!

Summary:

Actress keerthi pandiyan farming video goes viral

கொரோனா ஊரடங்கு காரணமாக அனைவரும் வீடுகளிலையே முடங்கி உள்ளனர். இந்நிலையில் சினிமா பிரபலங்கள் அவ்வப்போது பொழுதுபோக்கிற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சில வீடியோக்களை பதிவு செய்துவருகின்றனர்.

அந்தவகையில், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி பாண்டியன் அவ்வப்போது சில வீடியோக்களை பதிவிட்டு வைரலாக்கிவருகிறார். சில நாட்களுக்கு முன் கீர்த்தி பாண்டியன் தனது தந்தைக்கு சொந்தமான நிலத்தில் டிராக்டரால் உழுவது போன்ற காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தற்போது வயலில் இறங்கி, நாற்று நடும் பெண்களுடன் இணைந்து நாற்று நடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் கீர்த்தி பாண்டியன். தற்போது இந்த வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

மேலும், தான் தனது தந்தைக்கு சொந்தமான இடத்தில்தான் நாற்று நடுவதாகவும், இது பொது இடம் இல்லை, தான் ஊரடங்கு உத்தரவை மீறவில்லை எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் நடிகை கீர்த்தி பாண்டியன்.


Advertisement