ஆடை சிறுசா இருந்தாலும் நடிகை கஸ்தூரிக்கு எவ்வளவு பெரிய மனசு! வீடியோ பாருங்க புரியும்

Actress kasturi wishes to bring rain water


Actress kasturi wishes to bring rain water

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. கிட்டத்தட்ட புகழ்பெற்ற ஹீரோக்கள் அனைவருடனும் கை கோர்த்து நடித்து விட்டார். தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பேர் போனவர் என்றால் அதுவும் கஸ்தூரி தான்.

எந்த விஷயமாக இருந்தாலும் தைரியமாக நேருக்கு நேர் பேசக்கூடியவர் நடிகை கஸ்தூரி. இடையில் எங்கே இருந்தார் என்பது கூட தெரியவில்லை ஆனால் இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் கலக்கி வருகிறார்.

actress kasthuri

அவ்வப்போது நாட்டில் நடக்கும் விஷயங்களுக்கு தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார். படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். தற்போது 44 வயதாகும் கஸ்தூரி மிகவும் கவர்ச்சியான உடையணிந்து புகைப்படங்கள் வெளியிடுவதும், கவர்ச்சி பாடல்களில் நடிப்பதும் ரசிகர்களுக்கு சற்று சங்கடத்தைதான் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று குட்டையான ஒரு உடையணிந்து மழையில் மிகவும் ரசனையுடன் நனையும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை பதிவிடும் போதே, சென்னை பெண்ணான எனக்கு மழையின் அவசியம் நன்கு தெரியும். தண்ணீரின்றி வாடும் என் சென்னை மக்களுக்கு இந்த மழை நீரினை பாட்டிலில் அடைத்து எடுத்து செல்லபோகிறேன் என கூறியுள்ளார்.