அடச்சே.. பெண்ணியம் பேசுன என் புத்திய..., - பல்பு வாங்கிய பிரபல நடிகை டிவிட்டரில் கொந்தளிப்பு.!

அடச்சே.. பெண்ணியம் பேசுன என் புத்திய..., - பல்பு வாங்கிய பிரபல நடிகை டிவிட்டரில் கொந்தளிப்பு.!


actress-kasthuri-tweet-about-bjp-man-abuse-audio-leak-i

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாஜக மகளிரணி நிர்வாகி டெய்ஸியிடம், பாஜக பிரமுகர் சூர்யா ஆபாசமாக பேசியதாக ஆடியோ வெளியாகி வைரலானது. இந்த விஷயம் தொடர்பான சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தவே, பின்னர் இருவருக்குள்ளும் பரஸ்பரம் ஏற்பட்டதாக செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்தனர். 

இந்த விஷயம் அவர்களுக்குள் பரஸ்பரத்தை ஏற்படுத்தினாலும், தமிழக அளவில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பலகட்ட கண்டனங்களை தங்களுக்கு தெரிந்த பாணியில் எடுத்து சென்று வருகின்றனர். பாஜக தலைவர் அண்ணாமலை தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்., அவர்களுக்கு கட்சி பேதம் இல்லை என்று தெரிவித்து வருகிறார். 

actress kasthuri

இந்நிலையில், நடிகை கஸ்தூரி ட்விட்டில், "அரைமணிநேரம் அவதூறாக பேசியவர், அரை பைசாவிற்கு விளக்கம் கொடுத்து அறிக்கை கூட விடவில்லை. பேசியதெல்லாம் சரி என்று வைத்துக்கொள்வோமா?. டெய்சிக்காக பெண்ணியம் என பொங்கிய என்னைத்தான்.. (செருப்பின் படத்தை பதிவிட்டு மறைமுகமாக தன்னை செருப்பால் அடிக்க வேண்டும் என கூறுகிறார்). இனி பாஜகவினர் சகோதரி என அழைத்தாலே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.