சினிமா பிக்பாஸ்

'ஐயோ சாமி ஆளை வுடு' பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வது குறித்து நடிகை கஸ்தூரி பரபரப்பு ட்வீட்!

Summary:

Actress kasthuri about big boss 3

விஜய் டிவியில் நடைபெற்று வரும் பிக் பாஸ் சீசன் 30 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் மத்தியில் பல சுவாரசியமான முட்டாள்களும் மோதல்களும் அரங்கேறி வருகின்றன.

இந்த சீசன் துவக்கத்தில் இருந்தே நடிகை கஸ்தூரி ஒரு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார் என அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் முதலில் வந்த 16 போட்டியாளர்களில் நடிகை கஸ்தூரி இடம்பெறவில்லை.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சம்பவங்களைப் பற்றி கடந்த ஒரு சில நாட்களாக தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்து வருகிறார் கஸ்தூரி. நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் இயக்குனர் சேரன் கண்ணீர் விட்டு அழுதார். மீரா மிதுனுக்குள் சேரனுக்கு ஏற்பட்ட வாய்த்தகராறில் சேரன் அவ்வாறு அழ நேர்ந்தது.

இதனைத் தொடர்ந்து அதைக்குறித்து தெரிவித்துள்ளார் நடிகை கஸ்தூரி "பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல கடந்த மூன்று வருடங்களாக என்னை கூப்பிட்டு வந்தனர். இந்த வருடம் உள்ளே போகலாம் என்று தான் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் நேற்று நடந்ததை பார்க்கும் பொழுது நமக்கு ஏன் இந்த வம்பு என தோன்றுகிறது 'ஐயோ சாமி ஆளை வுடு' இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Advertisement