"தயவுசெய்து என்னையும் என் பொண்ணையும் இந்த மாதிரி பண்ணாதீங்க" நடிகை கஜோலின் உருக்கமான பதிவு..
பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை கஜோல். இவர் தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் ஒரு சில காரணங்களினால் இவர் தொடர்ந்து திரைப்படங்கள் நடிக்கவில்லை.

மேலும், இந்தியில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வெற்றி நாயகியாக திகழ்ந்து வருகிறார். நடிகை கஜோல், படங்கள், வெப் சீரியஸ்கள் போன்றவற்றில் அதிகமாக ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'தி ட்ரையல்' எனும் வெப்சரிஸ் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது.
இது போன்ற நிலையில், நடிகை கஜோல் தன்னை பின் தொடரும் புகைப்பட கலைஞர்களைப் பற்றி பிரபல நிகழ்ச்சியில் உருக்கமாக பேசியிருந்தார். அவர் கூறியதாவது, "நடிகைகளுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை என்பது இருக்கும். எல்லா இடங்களிலும் பின்தொடர்ந்து புகைப்படம் எடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

என்னை மட்டுமில்லாது என் மகள் நைசா தேவகனையும் எங்கு சென்றாலும் விரட்டி சென்று புகைப்படம் எடுக்கிறார்கள். என் மகளுக்கு என்று தனிப்பட்ட விஷயம் ஒன்று இருக்கிறது. என்னை மட்டும் அல்லாது என் மகளையும் இவ்வாறு துரத்திச் சென்று புகைப்படம் எடுப்பதை தயவு செய்து விடுங்கள்" என்று நடிகர் கஜோல் பேசியிருக்கிறார்.