இப்போவே இப்படி தெரியுது... கர்ப்பமாக இருக்கும் நடிகை காஜலின் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ...

இப்போவே இப்படி தெரியுது... கர்ப்பமாக இருக்கும் நடிகை காஜலின் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ...



actress-kajal-aggarwal-latest-photo-EV7W9Q

தமிழ் சினிமாவில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக பழனி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர் நடித்த சில திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், நடிகர் ராம்சரணுடன் இணைந்து நடித்த மகதீரா என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ரசிகர்கள்  மத்தியில் பிரபலமானார்.

அதனை  தொடர்ந்து அவர் தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் தொழிலதிபர் கௌதம் கிட்சிலு என்பவரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். 

இவர்களின் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்த காஜல் அகர்வால், சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால்தான் அவர் படங்களில் இருந்து விலக்கியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் காஜலின் கணவர் காஜல் கர்ப்பமாக இருப்பதை அண்மையில் உறுதியும் செய்தார்.

 மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர், தற்போது மஞ்சள்  நிற  உடையில் தான் கர்ப்பமாக இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் செம  வைரலாகி  வருகிறது. இதோ அந்த புகைப்படம்.