திருமணத்திற்கு பிறகு இப்படிதான்.. நடிகை காஜல் அகர்வாலின் அட்டகாசமான முடிவு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

திருமணத்திற்கு பிறகு இப்படிதான்.. நடிகை காஜல் அகர்வாலின் அட்டகாசமான முடிவு! உற்சாகத்தில் ரசிகர்கள்!


Actress kajal agarwal decision to act in cinema

தமிழில் பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக  அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர்  பொம்மலாட்டம், மோதிவிளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, மெர்சல், ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மாரி, விவேகம் என பிரபல சினிமாக்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

காஜல் அகர்வால் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து இந்திய அளவில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். காஜல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் ஆச்சார்யா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

kajal

இதனை தொடர்ந்து நடிகை காஜல்அகர்வாலுக்கு அக்டோபர் 30ஆம் தேதி கெளதம் கிட்சிலு என்பவருடன் மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால், தான் வாழ்நாள் முழுவதும் நடித்துக் கொண்டிருப்பேன். திருமணத்திற்கு பின் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில்  நடிக்க முடிவெடுத்துள்ளேன். நல்ல கதை மற்றும் கதாபாத்திரம் கிடைத்தால் போதும் சம்பளம் முக்கியமில்லை என கூறியுள்ளார்.