அவர் வந்தால் நான் வரமாட்டேன்! அடம்பிடிக்கும் காஜல் அகர்வால்!Actress kaajal agarwal fight with co actress

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் மற்றும் தெலுங்கு என மாறி மாறி ஹிட் கொடுத்த காஜல் அகர்வால் தற்போது இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் ரீமேக் படத்தில் நடித்துள்ளார். 

2008ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது.

kajal agarwal

அதன் பிறகு இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார். தமிழ் சினிமாவில் விஜய், அஜித், தனுஷ், கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது கமலுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் காஜல் அகர்வால்.

மேலும் தெலுங்கில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடிப்பில் கவசம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மெஹ்ரீன் பிர்சாதா மற்றுமொரு கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போதே காஜலுக்கு மெஹ்ரீன் பிர்சாதாவிற்கு பனிப்போர் நிலவியதாக கூறப்படுகிறது.

kajal agarwal

இனிக்கையில் அவர் இசை வெளியீட்டு விழாவிற்கு நான் வரமாட்டேன் என கூறியுள்ளார். அதே போல இந்த படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்ற போது கூட மெஹ்ரீன் பிர்சாதாவின் காட்சிகள் படமாக்க பட்ட பிறகே காஜல் துபாய்க்கு சென்றதாகவும் டோலிவூட் வட்டாரங்களில் செய்திகள் பரவியது

 ஆனால், இதுகுறித்து இருவரிடமும் கேட்டால் வழக்கமாக நடிகைகள் சொலவது போல வி ஆர் குட் ப்ரண்ட்ஸ் என்று சமாளிக்கிறார்களாம் காஜலும், மெஹ்ரீனும்.