குழந்தைகள் நன்கு வளரவேண்டும் பிறகுதான் திருமணம்! நடிகை ஹன்சிகா ஓபன் டாக்!

குழந்தைகள் நன்கு வளரவேண்டும் பிறகுதான் திருமணம்! நடிகை ஹன்சிகா ஓபன் டாக்!


Actress hansika talks about her feature life

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஹன்சிகா. தமிழ் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் முக்கிய நடிகையாக வளம் வருகிறார். இவர் சினிமா துறையையும் தாண்டி ஆதரவற்ற குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

தற்போது கைவசம் மூன்று படங்களை வைத்துள்ள நடிகை ஹன்சிகா பிறந்தநாள் கொண்டதில் சந்தோஷத்தில் உள்ளார். தனது ஒவொரு பிறந்தநாள் அன்றும் ஒரு குழந்தையை ஹன்சிகா தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ஆனால் இந்த வருடம் ஹன்சிகா எந்த குழந்தையையும் தத்தெடுக்கவில்லை.

இதற்கு அவர் கூறியவை, மும்பை புறநகர் பகுதியில் ஒரு முதியோர் இல்லத்தைக் கட்டிக்கொண்டு உள்ளேன். ஆகையால், தான் குழந்தையை தத்தெடுக்கவில்லை.

அதுக்காக பணம் சேர்க்கவே, பாதிநேரம் செலவாயிடுது. நான் சினிமாவுல என்ன பண்ண நினைக்கிறேனோ அதுக்கான முழு சுதந்திரத்தை என் குடும்பம் எனக்கு தந்துள்ளது.

குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வரும் நானும் ஒரு குழந்தைதான். குழந்தைகளை நல்லபடியா வளர்க்கணும், குடும்பத்தைப் பார்த்துக்கணும். அதன் பின் தான் திருமணம், என்று கூறி உள்ளார்.

Actress hansika birthday special