இந்தியா சினிமா

ஊரடங்கில், ஆண் நண்பருடன் காரில் சென்ற பிரபல நடிகைக்கு நேர்ந்த விபரீதம்!

Summary:

Actress got accident when go out in lockdown

கன்னட சினிமாவில் கடந்த 2007ஆம் ஆண்டு சஜ்னி என்ற  படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஷர்மிளா மந்த்ரே. இவர் கன்னடாவில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் மிரட்டல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் 

ஆனால் அவருக்கு தமிழில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு  கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து அவர் கன்னட படங்களிலேயே நடித்து வந்தார். மேலும் இவர் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மாயா திரைப்படத்தின் ரீமேக்கில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். தமிழில் எங்கேயோ மச்சம் இருக்கு, சண்டக்காரி போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனோவால்  நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,  அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது ஆண் நண்பருடன் சொகுசு காரில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் பெங்களூரு வசந்த் நகர் ரயில்வே பாலத்தில் கார்  சென்றுகொண்டிருந்தபோது நிலைதடுமாறி  விபத்துக்குள்ளானது.

இதில் ஷர்மிளாவின் முகம் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவசியமின்றி வெளியே சென்ற அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement