நடிகை கௌதமின் சொத்துக்களை அபகரிக்க முயற்சி; காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வந்த கௌதமி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருக்கும் ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துக்களை, அழகப்பன் மற்றும் அவரின் மனைவி மோசடி செய்துவிட்டனர். என்னையும், எனது மகளையும் அழகப்பன் மிரட்டி வருகிறார்.
மோசடி செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது சொத்துக்களை ஒன்றிணைத்து, மோசடி செய்ய முயற்சித்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ரூ.25 கோடி சொத்துக்கள் உள்ளன. அவற்றில் 4 கோடி மதிப்பிலான சொத்துக்களை அபகரித்து உறுதியாகியுள்ளது.
எனது கஷ்டகாலத்தில் தனக்கு நிலங்கள் விற்பனை விவகாரத்தில் உறுதுணையாக இருந்த அழகப்பன் எங்களுக்கு மோசடி செய்துவிட்டார். அவரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.