சினிமா

அட! நடிகை அனுஸ்காவின் உண்மையான பெயர் என்ன தெரியுமா? அனுஷ்கா அவரது உண்மையான பெயர் இல்லையாம்.

Summary:

Actress anushka real name

இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக இரண்டு என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. இரண்டு திரைப்படம் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வரவேற்பை தரவில்லை. இதனால் மீண்டும் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற இவர் அருந்ததி திரைப்படம் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானார்.

இதனை அடுத்து விஜய்க்கு ஜோடியாக வேட்டைக்காரன் திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த இவருக்கு அதன்பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் குவிய தொடங்கியது. விஜய், விக்ரம், சூர்யா, ரஜினி என அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தார் அனுஷ்கா.

இதனிடையே இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இவர் நடித்த பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 படம் இந்திய அளவில் பெரும் சாதனை படைத்து இவருக்கும் வெற்றியை தேடித்தந்தது.

தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எங்கு பார்த்தாலும் அனுஸ்கா, அனுஷ்கா என ரசிகர்கள் உருகுகிறார்கள். உண்மையில் இவரது பெயர் அனுஸ்கா இல்லை. இவரது உண்மையான பெயர் ஸ்வீட்டி ஷெட்டி. சினிமாவிற்காக தனது பெயரை அனுஷ்கா ஷெட்டி என மாற்றிக்கொண்டார் நடிகை அனுஷ்கா.


Advertisement