"பாட்டு லிங்க் கிடைக்கல சாரே..." அனிருத்தை ட்விட்டரில் கலாய்த்த நடிகை.!

"பாட்டு லிங்க் கிடைக்கல சாரே..." அனிருத்தை ட்விட்டரில் கலாய்த்த நடிகை.!


actress-and-singer-kalyani-priyadharshan-trolls-anirudh

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கி வருபவர் அனிருத். இன்றிருக்கும் இளைய தலைமுறை ரசிகர்களுக்கு  விருப்பமான இசையமைப்பாளராக இருந்து வருகிறார். இவர் இசையமைத்த பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் ஆகி  ரசிகர்களின் மனதை கவர்ந்தது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி கமல், விஜய் அஜித் என அனைவரது திரைப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் கூட இவரது இசையில் வெளியான கமல்ஹாசன் நடித்த விக்ரம் என்ற திரைப்படம்  மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது.

anirudh

தற்போது சூப்பர் ஸ்டார் நடித்து வரும் ஜெயிலர்  மற்றும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படம். அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் விடாமுயற்சி போன்ற திரைப்படங்களுக்கும் அனிருத் தான் இசையமைப்பாளராக இருக்கிறார். மலையாளத் திரைப்படம் ஒன்றிற்கும் இசையமைத்திருக்கிறார் அனிருத்.

anirudh

செசம் மெஹில் பாத்திமா என்று பெயரிடப்பட்ட அந்த திரைப்படத்தில் முதல் பாடல் நேற்று வெளியாக இருந்தது. இந்தப் பாடலை அனிருத்தும்  கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். கல்யாணி பிரியதர்ஷன் பிரபல சினிமா தயாரிப்பாளர் பிரியதர்ஷினி மகள் ஆவார். இவர் மாநாடு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நேற்று பாடல் வெளியாக சிறிது தாமதமானதால் அனிருத் வெளியிட்ட ப்ரோமோ வீடியோவிற்கு எனக்கு இன்னும் லிங்க் கிடைக்கவில்லை என கமெண்ட் செய்திருக்கிறார். இதனை  நெட்டிசன்கள்  ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.