பிரபல இளம் நடிகையை கிண்டல் செய்த தளபதி விஜய்..! அப்படி என்ன அந்த நடிகை சொன்னார் தெரியுமா?
பிரபல இளம் நடிகையை கிண்டல் செய்த தளபதி விஜய்..! அப்படி என்ன அந்த நடிகை சொன்னார் தெரியுமா?

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் நடிகர்,நடிகைகள் மற்றும் ரசிகர்கள் என அனைவராலும் கொண்டாடக்கூடிய ஒரு நடிகர். இவருக்கு என்று தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விடுமுறை ஸ்பெஷலலாக வெளியாகயிருந்த நிலையில் நாடு முழுவதும் ஏற்ப்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக திரைக்கு வராமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட நடிகை ஆண்ட்ரியா, தளபதி விஜய் தான் வெறித்தனம் பாடலை பாடினார் என்பது எனக்கு தெரியாது. இதை நான் தளபதி விஜய்யிடமே கூறினேன். அதற்கு அவர் உடனே ஏன்மா நீயெல்லாம் தமிழ்நாட்ல தான் இருக்கியா? என கிண்டல் செய்தார் என ஆண்ட்ரியா கூறினார்.